தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பலம் வந்தவர் விவேக். தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடியனாக திகழ்ந்தவர் இவர். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவர் இந்த மண்ணை விட்டு சென்றாலும் மக்களின் மனதை விட்டு இன்னும் செல்லவில்லை. விவேக் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்து வந்தவர்.

இதனிடையே விவேக்கின் குணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள மூத்த பத்திரிகையாளரான Cheyyar balu சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி விவேக் ஒரு இரக்ககுணம் கொண்டவர். அனைவருக்கும் உதவுவதில் வல்லவர். எப்போதும் அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்வார். ஒரு திரைப்படத்தில் விவேக் உடன் நடித்த பல் இல்லாத காமெடி நடிகர் ஒரு நாள் சைக்கிள் மிதித்து கொண்டு படப்பிடிப்பிற்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது காரில் வந்து கொண்டிருந்த விவேக் அதனை கண்டு மனம் உருகி அடுத்த நாள் அந்த நடிகருக்கு ஒரு TVS 50 வண்டி ஒன்றினை வாங்கி கொடுத்தார் என்று பிரபலமான பத்திரிக்கை ஆல்டர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். மேலும், இந்த அளவிற்கு இறக்க குணம் கொண்டவர்தான் விவேக் என்று அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

