Categories: சினிமா

விஜயகாந்திடம் ஒரு சீன் எடுக்க அனுமதி கேட்ட விவேக்… வீட்டிற்கு அழைத்து கேப்டன் செய்த செயல்…

Spread the love

விவேகானந்தன் என்று அழைக்கப்படும் விவேக் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவார். தனது நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளையும் சமூகத்திற்கான செய்திகளையும் மக்களிடம் சேர்த்தவர் விவேக். சென்னையில் பணிபுரிந்த போது மெட்ராஸ் ஹியூமர் கிளப்பில் மிமிக்ரி செய்து வந்த விவேக்கை அந்த கிளப்பின் நிறுவனர் கே பாலச்சந்திரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

கே பாலச்சந்தர் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் விவேக்கை நடிக்க வைத்தார். அப்படி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விவேக் 1990களுக்கு பிறகு வந்த திரைப்படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக தன்னை உருமாற்றிக் கொண்டார். அதற்கு பிறகு வந்த ரன், சாமி, பேரழகன், அந்நியன், பார்த்திபன் கனவு, சிவாஜி என பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றி புகழ் பெற்றவர் விவேக்.

தனது நகைச்சுவைக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மூன்று பிலிம்பேர் விருதுகளையும் 6 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர். இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அன்போடு அழைத்தனர்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் விவேக் சமூக ஆர்வலராகவும் இருந்தவர். தனது வாழ்நாளில் ஏகப்பட்ட மரக்கன்றுகளை நட்டவர். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சிந்தனைகளை தீவிரமாக பின்பற்றுபவர் விவேக். ஒருநாள் விவேக் விஜயகாந்துடன் ஒரு சீன் எடுப்பதற்காக சென்றபோது நடந்த நிகழ்வுகளை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் நான் விஜயகாந்த் அவர்களிடம் ஒரு சீன் சொல்லுவது போல ஒரு காட்சி படமாக விரும்பினேன். அப்போது அவருக்கு போன் செய்து வரலாமா என்று கேட்டேன். அதற்கு என்ன தாராளமா வீட்டுக்கு வா என்று ஒரே வார்த்தையில் கூறினார் கேப்டன். மறுநாள் நான் வீட்டிற்கு கேமரா மேன் எல்லாரையும் அழைத்துக் கொண்டு நல்ல மேக்கப் செய்து கொண்டு சூட்டிங் காக தயாரா போனேன். அப்போ மேலே இருந்து கசங்கிய சட்டை வேட்டியுடன் விஜயகாந்த் அண்ணன் கீழே இறங்கி வந்தார்.

என்னை பார்த்து அது ஒன்னும் இல்ல விவேக் நைட்டு சூட்டிங் லேட் ஆயிடுச்சு அப்படின்னு அசால்ட்டா சொன்னார். தலையெல்லாம் கலைஞ்சி இருந்தது. அப்போ நான் வேற நல்ல மேக்கப் போட்டு இருந்தேன். அதனால விஜயகாந்த் அண்ணனிடம் லைட்டா டச்அப் பண்ணிக்கோங்க அண்ணா அப்படின்னு கேட்டேன். உடனே அதெல்லாம் எதுக்குடா நீ என்கிட்ட கதை சொல்ல வந்திருக்க வீட்ல இருக்க மாதிரி தானே காட்சி படம் பார்க்க போறே. அப்போ இப்படி இருந்தாதான நல்லா இருக்கும். சும்மா நீ சூட்டிங் எடு எங்க இருக்கனும் என்ன பண்ணனும்னு சொல்லு அப்படின்னு சொல்லிட்டாரு. அவருடைய எளிமைய என்னன்னு சொல்றது. அன்னைக்கு இருந்து அவரை ரொம்பவே வியந்து பார்க்க ஆரம்பிச்சிட்டேன் என்று கேப்டன் விஜயகாந்த் அவர்களை புகழ்ந்து பேசி இருக்கிறார் விவேக்.

admin

Recent Posts

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

2 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

7 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

7 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

11 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

13 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

15 minutes ago