Categories: சினிமா

“என்னை மிரட்டினார்கள்.. விசித்ராவை 10 ரூம்களில் மாற்றி தங்க வைத்தேன்”.. 23 வருட சீக்ரெட்டை உடைத்த விசித்ராவின் கணவர்..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக நடிகை விசித்ரா பங்கேற்றுள்ளார். நேற்று முன்தினம் ஒரு டாஸ்க்கில் பேசிய விசித்ரா, 2001ம் ஆண்டில், கேரளா மலம்புழாவில் ஷூட்டிங் நடந்த போது ஒரு பிரபல நடிகர் தன்னை ரூமுக்கு வரச்சொன்னதாகவும், அவர் போகாததால், தங்கியிருந்த அறைக்கதவை கும்பலாக வந்து தட்டி மிரட்டியதாகவும் ஷூட்டிங் ஸ்பாட்டில், உடலில் பல இடங்களை கைவைத்த நபர்கள் குறித்து புகார் தெரிவித்ததால், ஸ்டண்ட் மாஸ்டர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியது, உடனடியாக டிரண்டிங் ஆனது. அந்த படம் 2001ல் எடுக்கப்பட்ட பலேவடிவி என்றும், ரூமுக்கு அழைத்தவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்றும் தகவல் பரவி, வைரலானது.

இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் கேரளாவில் உள்ள விசித்ராவின் கணவர் ஷாஜி,கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு 2, 3 முறை தான் அதுபற்றி நாங்கள் இருவரும் பேசி இருப்போம். அதுபற்றி பேசினாலே, கண் கலங்கி விடுவார். அவரது மனதை காயப்படுத்திய விஷயம் என்பதால் நானும் அதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி விடுவேன். என் பசங்களுக்கு கூட இந்த விஷயம் இதுவரை தெரியாது. இப்போதுதான் தெரிந்துள்ளது. கல்லூரி செல்லும் என் மகன், இதுபற்றி ஏன் இதுவரை என்னிடம் சொல்லவில்லை என கேட்டான். இது சொல்ல வேண்டிய விஷயமல்ல, மறக்க வேண்டிய விஷயம் என்று சொன்னேன்.

இப்போதும் அந்த நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர் பற்றி சொல்ல முடியவில்லை. அது விசித்ராவின் பாதுகாப்பு கருதிதான். நடிகர் சங்கம், போலீஸ் ஸ்டேஷன் என எங்கு புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. சினிமாத்துறை நடிகர், நடிகைகளும் இதில் விசித்ராவுக்கு ஆதரவாக வரவில்லை. இந்த பிரச்னையை பெருசு பண்ணாதீங்க, அந்த படத்துல வேணா நடிக்காதீங்க என்பதுதான் பலரது அட்வைஸாக இருந்தது. விசித்ரா தங்கியிருந்த ஓட்டல் ஜெனரல் மேனேஜர் என்பதால், அவரது பாதுகாப்புக்காக ஒரு நாளில் 10 ரூம்களில் அவரை மாற்றி தங்க வைப்பேன். அதற்காக என்னையும் மிரட்டினார்கள். இது என் ஓட்டல். அவருக்கு பாதுகாப்பு தருவதுதான் என் கடமை, என்று அந்த நடிகரின் ஆட்களிடம் சொல்லி விட்டேன். பிறகு ஒரு கட்டத்தில், இருவரும் விரும்பி திருமணம் செய்துக்கொண்டோம், என கூறியிருக்கிறார் விசித்ராவின் கணவர் ஷாஜி.

admin

Recent Posts

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

2 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

19 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

22 minutes ago

பள்ளிக்கூடமா..? பாலியல் கூடமா..? ஒரே பள்ளியில் 20 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… அரசுப்பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…!!

சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…

25 minutes ago

அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…

30 minutes ago

“இலவசம் ஏமாற்று வேலை…!” கோவையில் அதிமுக-வை அதிர வைத்த சந்திரபாபு நாயுடு…. அப்செட்டில் வேலுமணி டீம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…

43 minutes ago