இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட டைம் டிராவல் என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து மார்க் ஆண்டனி படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, சுனில் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடைய மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. முக்கியமாக இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் விஷ்ணு பிரியா நடித்துள்ளார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவே வந்துவிட்டாரா என ஆச்சரியப்படுகின்றனர்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றது. சில்க் ஸ்மிதாவிற்கும், மார்க் ஆண்டனி படத்தில் நடித்த விஷ்ணுபிரியாவுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா உயிரிழந்தார். அடுத்த 1997 ஆம் ஆண்டு விஷ்ணு பிரியா பிறந்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 என்றும், தனது பிறந்த நாள் டிசம்பர் 13-ஆம் தேதி எனவும் விஷ்ணு பிரியா கூறியுள்ளார். திருப்பதியை பூர்வீகமாகக் கொண்ட விஷ்ணுபிரியாவை சில்க் ஸ்மிதாவின் மறு பிறவி என்ன பலர் கூறுகின்றனர். மேலும் நடிகை சில்க் ஸ்மிதா பலமுறை தனது கனவில் வந்ததாகவும் விஷ்ணு பிரியா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…