#image_title
பிரபல நடிகரான விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு, தோரணை, அவன் இவன். பூஜை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடிக்கும் படங்கள் அம்பலமாக வெற்றி பெறவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடித்த மாஸ் ஆண்டனி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. டைம் ட்ராவல் மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது.
எதிர்பார்த்ததை விட வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் உருவான ரத்தினம் திரைப்படத்தில் விஷால் நடித்தார், ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல ரத்தினம் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருத்தரப்பு ரசிகர்கள் திரைக்கதைகளும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என கூறினார்.
ஆனால் மற்றொரு தரப்பினர் எதிர்பார்த்தபடி படம் இல்லை என பேசியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் அதே நேரம் அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் ரத்தினம் படம் அவ்வளவாக பெரிதாக பேசப்படவில்லை. தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் விஷால் நடித்த கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று விஷால் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் விஷால் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதுவரை தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மூத்தவர்களிடம் இருந்து வரும் வாழ்த்து மிகவும் சிறப்பானது. இந்த நான் ஸ்பெஷல் ஆக அமைந்தது. எனது பிறந்த நாளை முன்னிட்டு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கும் நன்றி என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…