திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழுத் தலைவியான இவரது முதல் கணவர் ஸ்ரீராம் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் பிழைப்பு தேடி சென்னைக்குச் சென்றார். அங்கு சமையல் வேலைக்குச் சென்ற இடத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் விஜயபாலன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பூர் வந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயபாலன் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டிக்கு வந்த விஜயபாலன், தூங்கிக் கொண்டிருந்த தனது 19 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறவே, சத்தம் கேட்டு விழித்த தாய் விசாலாட்சி விஜயபாலனைத் தட்டிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜயபாலன், அரிவாளால் விசாலாட்சியின் கழுத்தில் கொடூரமாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் கொல்லப்பட்டதை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்ணையும் கொலை செய்துவிடுவதாக விஜயபாலன் மிரட்டியுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் சமயோசிதமாகச் செயல்பட்டு பாத்ரூம் செல்வதாகக் கூறி வெளியே வந்து வீட்டை வெளிப்புறமாகப் பூட்டினார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதற்குள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த விஜயபாலன், தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவலறிந்து வந்த 15-வேலம்பாளையம் காவல் துறையினர் விசாலாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கியிருந்த விஜயபாலனைக் கைது செய்தனர். அவருடன் இருந்த 2 சிறுவர்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வளர்ப்பு மகளிடம் அத்துமீற முயன்றதைத் தட்டிக் கேட்ட மனைவியை கணவனே வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…