“ரோட்டுல 500 ரூபாய் நோட்டு கிடந்தா தொடாதீங்க.. பின்னணியில் இருக்கும் ‘மயக்க’ மாஃபியா… வைரலாகும் போலீஸ் எச்சரிக்கை வீடியோ”..!!

Spread the love

இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் தனியாக நடந்து செல்லும்போது, சாலையில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகள் கிடந்தால், அவற்றை ஆசையிலோ அல்லது யாருடையது என்று பார்ப்பதற்காகவோ தொட்டு எடுக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். இது போன்ற ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி, கொள்ளையடிக்கும் புதிய வகை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மோஹித் குர்ஜார் என்ற காவல்துறை அதிகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாகப் பெண்கள் இதுபோன்ற ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/DZeTf3mR9HO/?utm_source=ig_embed&ig_rid=AJ0QzpwJaLcS0hyrlaX8GCJ

இந்தக் குற்றப் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், சாலையில் வீசப்படும் ரூபாய் நோட்டுகளின் மீது மயக்க மருந்து அல்லது ஏதேனும் ஒரு பிசுபிசுப்பான வேதிப்பொருள் தடவப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அந்தப் பணத்தை எடுத்து, அதன் வாசனையைத் தற்செயலாக நுகரும்போது, பாதிக்கப்பட்டவர் உடனடியாகச் சுயநினைவை இழந்து மயங்கி விழ நேரிடும். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அருகில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் தங்களின் கொள்ளைச் சம்பவங்களையோ அல்லது பிற கடுமையான குற்றங்களையோ அரங்கேற்றுகின்றனர். இந்த விழிப்புணர்வுக் காணொளியைப் பலரும் வரவேற்றாலும், நெட்டிசன்கள் சிலர் “நாங்கள் பணத்தை எடுப்போம், ஆனால் முகர்ந்து பார்க்க மாட்டோம்” என்றும், வீடியோவில் அதிகாரி தவறுதலாக “1000 ரூபாய் நோட்டு” எனக் குறிப்பிட்டதையும் சமூக ஊடகங்களில் நகைச்சுவையாகக் கேலி செய்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

20 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

23 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

32 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

37 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

42 minutes ago