எங்க போனிங்க இவளோ நாள்..! ஆடியன்ஸ் பெருசு ஆனா என் பாணி மாறல… முன்னணி ஹீரோக்கள் பற்றி வினோத் ஓபன் டாக்…!!

Spread the love

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற தனித்துவமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடித்தவர் இயக்குநர் ஹெச். வினோத். தொடக்கத்தில் குறைந்த பொருட்செலவில் வலுவான கதைகளை இயக்கி வெற்றி கண்ட இவர், அடுத்ததாக அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி உச்ச நட்சத்திரங்களை வைத்து மாபெரும் பட்ஜெட் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கதையை மட்டுமே நம்பி இயக்கி வந்த அவர், கமர்ஷியல் ஹீரோக்களுடன் இணைந்தது அவருடைய தனித்துவமான கதை சொல்லும் பாணியை மாற்றிவிட்டதா என்ற கேள்வியை பலரது மத்தியிலும் எழுப்பியது.

இது குறித்து சமீபத்தில் அவரிடம், “அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் பணியாற்றியது உங்களை ‘இன்ஃபுளியன்ஸ்’ செய்துவிட்டதா?” என நேரடியாகக் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த வினோத், “யாராவது என்னை இன்ஃபுளியன்ஸ் செய்வதற்கு நான் என்ன சிறு குழந்தையா?” என்று தனது பாணியில் கூலாகவும், அதே சமயம் நெத்தியடியாகவும் தெரிவித்தார். பெரிய நடிகர்களுடன் இணையும் போது அவர்களுடைய மாபெரும் ரசிகர் பட்டாளத்தின் எதிர்பார்ப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும், அதனை அவர்கள் தன்மீது செலுத்தும் ஆதிக்கம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், உச்ச நட்சத்திரங்களை வைத்து ஏன் படம் இயக்கினீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலும் அனைவரையும் ஈர்த்துள்ளது. “என்னிடம் வேலை இல்லை, வேலை கேட்டேன், அவர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள், அதனால் படம் பண்ணினேன்” என்று எவ்வித பந்தாவும் இன்றி மிகவும் யதார்த்தமாகப் பதிலளித்துள்ளார். வினோத்தின் இந்த நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சின் மூலம், பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது அந்த ஆடியன்ஸுக்காக சில விஷயங்களைச் சேர்த்தாலும், இயக்குநராக அவருடைய அடிப்படைத் தன்மையும் சினிமா சிந்தனையும் எந்த வகையிலும் மாறிவிடவில்லை என்பது தெளிவாகிறது.

Gayathri

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago