தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது குறித்துப் பேசிய அவர், இது ஒரு திட்டமிடப்பட்ட தேர்தல் வியூகமாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம் எழுப்பியுள்ளார். மக்கள் மத்தியில் விஜய் மற்றும் அவரது கட்சி மீதான எதிர்பார்ப்பைத் தக்கவைக்க, வேண்டுமென்றே இந்தக் காட்சிகள் கசியவிடப்பட்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்தக் கசிவு குறித்து விசிக-விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவைச் சாடிய வினோஜ் பி.செல்வம், “அமைச்சர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும், ஆனால் வேலையே இல்லாமல் சும்மா இருப்பவர் ஆதவ் அர்ஜுனா; அவரே இந்தக் காட்சிகளைக் கசியவிட்டிருக்கலாம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். திரைப்படக் காட்சிகள் தயாரிப்பு நிறுவனம் அல்லது விஜய் தரப்பில் இருந்து மட்டுமே கசிய வாய்ப்புள்ளதால், இது தமிழக வெற்றிக் கழகத்தின் திட்டமிட்ட அரசியல் விளம்பர யுத்தியாகவே பார்க்கப்படுவதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…