அய்யோ… சிலை அடியில ஆளுங்க மாட்டிட்டாங்க… மழையால் பக்தர்கள் மீது… சரிந்து விழுந்த விநாயகர் சிலை… மகாராஷ்டிராவில் ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நல்லாசோப்ரா மேற்கு பகுதியில் உள்ள யஷ்வந்த் கெளரவ் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலையை எடுத்துச் சென்றபோது திடீரென எதிர்பாராத வகையில் பலத்த மழை பெய்துள்ளது. மழையிலிருந்து சிலையைப் பாதுகாப்பதற்காக பக்தர்கள் அவசர அவசரமாக அதை பிளாஸ்டிக் தாள்களால் மூட முயன்றனர்.

அப்போது, காற்று மற்றும் மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விநாயகர் சிலை எதிர்பாராதவிதமாக சரிந்து அருகில் நின்றிருந்த பக்தர்கள் மீது விழுந்தது. இதனால் சிலையின் அடியில் சுமார் 4 முதல் 5 பக்தர்கள் சிக்கிக்கொண்டதால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

உடனடியாகச் செயல்பட்ட உள்ளூர்வாசிகளும் சக பக்தர்களும் விரைந்து வந்து, அடியில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படாமல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்; பின்னர் சிலை பாதுகாப்பாக பந்தலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Swetha

Recent Posts

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

14 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

17 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

27 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

35 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

35 minutes ago