#image_title
தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது குடும்ப பாங்கான திரைப்படங்களிலும் நடித்து பெண் ரசிகர்களை ஈர்த்து வந்தார் விஜயகாந்த். அப்படி அவர் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானத்தைப் போல. அந்த படம் 175 நாட்கள் ஓடி வசூலைக் குவித்தது. அந்த படத்தில் விஜயகாந்துக்கு ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும்தான். அதுவும் கிளைமேக்ஸில்தான். ஏனென்றால் கதைக்களமே குடும்ப உறவுகளும், அவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டமும்தான்.
முதலில் இந்த கதையை இயக்குனர் விக்ரமன் விஜயகாந்துக்காக எழுதவில்லையாம். அவர் நகைச்சுவை நடிகர் ஜனகராஜை மனதில் வைத்துதான் இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார். ஜனகராஜ் மூத்த அண்ணனாகவும், நெப்போலியன், சுவலட்சுமி தம்பி தங்கை என கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் விக்ரமன்.
பின்னர் இக்கதையை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியிடம சொல்ல அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். பின்னர் இந்தக் கதைக்கு சரத்குமார் ஹீரோவாக நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால் சரத்குமாருக்கு இந்த கதை செட் ஆகாது எனக் கூறி சூர்யவம்சம் படத்தை எடுத்துள்ளார். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
அதன்பின் தான் வானத்தைப் போல கதையை மீண்டும் தூசு தட்டி விஜயகாந்துக்கு இரட்டை வேடம் கொடுத்து, தங்கை கதாபாத்திரத்தை இன்னொரு தம்பியாக மாற்றியுள்ளார். இந்தக் கதையை விஜயகாந்திடம் சொல்ல அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படி உருவானதுதான் வானத்தைப் போல திரைப்படம்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…