தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலமாகத்தான் தனக்கென ஒரு புகழை சினிமாவில் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்தது போல உடலை மாற்றிக் கொண்டு நடிப்பதில் பெயர் போனவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இறுதியாக இவர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன்.
எஸ் யு அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரஜ் வெஞ்சார மூடும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாவது பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என தெரிகிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு தியேட்டர்களில் விநியோகம் செய்யும் உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் வாங்கியுள்ளார். இன்று முன்னணி விநியோகஸ்தர்களில் மிக ராசியான விநியோகஸ்தர் பைவ் ஸ்டார் செந்தில் தான். அவர் கை வைத்தால் கட்டாயம் அந்த படம் ஹிட் ஆகும் என்ற சென்டிமென்ட் உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் சிபு கேரளாவில் இப்படத்தை விநியோகம் செய்கிறார். சுமார் 200 தியேட்டர்களில் 300 ஸ்கிரீனில் இந்த படம் வெளியாக உள்ளது. ஆந்திராவில் இப்படத்தில் விநியோக உரிமையை மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் திருப்பதி பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து வாங்கியுள்ளனர். இதனால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…