தமிழக அரசியலில் விஜய் நுழைந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என தொடர்ந்து கூறி வருகின்றார். இதுவரை நடந்த தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் விஜய் இந்த பேச்சைதான் முன் வைத்துள்ளார். திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து திமுகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் விஜய் செயல்பட்டு வருகின்றார். இதனிடையே தேர்தலில் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த உதயநிதி, நாங்கள் பாஜகவையும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பாஜக அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கின்றோம். தமிழக மக்கள் பாஜகவின் சதியை அறிந்து அதனை தோற்கடிப்பார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகள் அனைத்து டெல்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகிறது. நீண்ட காலமாக எங்களுடைய பிரதான போட்டியாளராக அதிமுக இருந்தாலும் தற்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அதிமுக இருந்தாலும் அதை தான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கின்றோம். அவர்கள்தான் எங்களது போட்டியாளர் என உதயநிதி மறைமுகமாக விஜயை தாக்கி பேசியுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…