“இத்தனை ஆண்டுகள் மூடி மறைச்சது ஏன்?”…. ஜெம் வீரமணி வழக்கைக் கையில் எடுத்து ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் விட்ட ஓபன் சவால்….!

Spread the love

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து உரைநிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பாக எழுப்பிய குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “தமிழகத்தில் பல ஆண்டுகளாகச் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட விவகாரத்தை முந்தைய திமுக அரசு அமைதியாக மூடி மறைத்தது” என்று சாடிய அவர், தவெக அரசு அமைந்த பிறகே சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே ரகசியக் கூட்டு நிலவுவதாகவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

இருப்பினும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் உள்ள ஒரு போக்சோ வழக்கைக் முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரே தேர்தல் பிரச்சார மேடையில் பேசுவது தகுமா எனப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி விசாரணை தொடர்பான விவரங்களை வெளியில் பேசக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் லாபத்திற்காகக் கையில் எடுப்பது விதிகளுக்குப் புறம்பானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் ஷியாம் இது குறித்துக் கூறுகையில், “ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக வெளியில் யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்றும், சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமே விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் இதை ஒரு பொருட்டாகப் பேசுவது முறையல்ல; இது நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகக் கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது மக்கள் மத்தியில் நிலவிய ஒருசில அதிருப்திகளின் வடிகால்தானே தவிர பெரும் அலையினால் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். விஜய் பிரச்சாரம் செய்த பல தொகுதிகளில் தவெக வெற்றி பெறாததையும், 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் அதே போன்றதொரு இழுபறி நிலமையே நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

கலிகாலத்தின் உச்சம்..! உயிரோடு இருக்கும் ஒருவருக்கு பிண்ட தானமா?… இரண்டு மகன்களும் மரணம்… அடுத்த தலைமுறையை நம்பாத முதியவர்… பின்னணியில் உள்ள கண்ணீர் கதை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…

6 minutes ago

வருங்காலம் இளைஞர்கள் இப்படியா?… தவறை உணரவில்லை… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… காவலர்களிடம் வாக்குவாதம்… சாலையில் பெரும் பரபரப்பு…!!

சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…

14 minutes ago

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

30 minutes ago

இபிஎஸ்க்கு அல்டிமேட் டெஸ்ட்… விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை…. நாளை காத்திருக்கும் மெகா அரசியல் ட்விஸ்ட்…..!

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…

31 minutes ago

“நட்புனா சும்மாவா?”…. இன்ஸ்டா, வாட்ஸ்அப் மூலம் இந்தியக் கடற்படையை வளைத்த பாகிஸ்தான் பெண் உளவாளிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…

38 minutes ago

இதை உடனே பாருங்கள்..! இ-ஸ்கூட்டரும் இப்படி ஆகுமா?… லட்சக்கணக்கில் நஷ்டம்… கன்டெய்னருக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறியடித்து ஓடிய டிரைவர்…!!

இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…

39 minutes ago