நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜனநாயகன். இந்தப் படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பொது இடத்தில் நின்று செல்பி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக்கணக்கானோர் நின்று கோஷம் இட்டு குரல் எழுப்புவது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது . இதனால் விஜயின் கடைசி படமாக ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு படுத்தி தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள.
மேலும் படத்தின் போஸ்டரில் நாங்கள் அவரை ஜனநாயகம் என்று தான் அழைப்போம் என்றும் படக்குழு கூறியிருந்தது. தொடர்ந்து வெளியான செகண்டு லுக் போஸ்டரில் எம்ஜிஆரின் பிரபல பாடலான நான் ஆணையிட்டால் பாடலில் இருப்பது போன்ற சாட்டையோடு சிவப்பு நிற ஆடையில் விஜய் சாட்டை சுற்றுகிறார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். விஜய் முன்னதாக மாஸ்டர் பட படபிடிபில் இருந்த சமயத்தில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ஆனது ரைடு நடத்தியது. இந்த சம்பவம் அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தான் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்த நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்திக்க ரசிகர்கள் திரண்டார்கள்.
அந்த சமயத்தில் அவர் வாகனம் மீது ஏறி நின்று எடுத்த செல்பி தான் சில தினங்களுக்கு ஹாட் டாபிக்காகவே இருந்தது. இந்த நிலையில் அதே போன்ற புகைப்படத்தை விஜயின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராக கொடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில முக்கியமான படங்களை இயக்கியிருந்தாலும் அதில் தன்னுடைய கதை மற்றும் இயக்கத்தில் வெற்றி கண்டவர் தான் எச். வினோத். சதுரங்க வேட்டை என்னும் தன்னுடைய முதல் படத்தில் மொத்த சினிமாவின் திரும்பி பார்க்க வைத்த இவர் தற்போது விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
இந்த படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுகளையும் மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ஒரு அரசியல் படமாக இருப்பதால் அதை சம்பந்தமே இல்லாமல் ஒரு நாளில் ரிலீஸ் செய்தால் வசூல் மட்டும் தான் லாபம். ஆனால் விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளதால் அவருக்கு ஏதாவது அரசியல் சம்பந்தமாக உதவலாம் என்பதற்காக 2026 ஆம் வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால் விஜயின் இந்த படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தி நகரும் என்றும் பலரும் கூறிவரும் நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாக இருக்கிறது.
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…