ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்று (ஜூலை 23) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவே கடைசி படம் என்பதால், அவரது ரசிகர்கள் “ஒன் லாஸ்ட் டான்ஸ்” என்ற உணர்ச்சிப்பூர்வமானக் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளை ஆக்கிரமித்தனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்காக இருந்தாலும், வினோத் தன் பாணியில் மாஸ் மற்றும் எமோஷன் கலந்த தமிழ் வடிவமாகக் கொடுத்துள்ளதால், விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. விஜய்யின் அபாரமான ஸ்கிரீன் பிரசன்ஸும், மாமிதா பைஜூவுடனான காட்சிகளும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன.
முதல் நாளிலேயே உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. ‘Sacnilk’ இணையதளத் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 13,067 காட்சிகளில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.48.27 கோடியும், வெளிநாடுகளில் ரூ.30 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் ரிலீஸான ஒரே நாளில் உலகளவில் ரூ.78.27 கோடியை அள்ளி சாதனை படைத்திருக்கிறது ‘ஜனநாயகன்’.
தற்போது வார இறுதி நாட்கள் தொடங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் இன்னும் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிலீஸான இரண்டாம் நாளான இன்றே இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை மிக எளிதாகக் கடந்துவிடும் எனப் பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர். பொதுவான பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் ‘ஜனநாயகன்’ புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…