தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.
ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்கள் பல நூறு நாட்களைக் கடந்து ஓடி உள்ளன. அந்தப் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜயகாந்த் இதுவரை 154 படங்களில் நடித்துள்ளார், அதில் 33 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. சட்டம் ஒரு இருட்டறை – 1981, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் – 1984, நானே ராஜா நானே மந்திரி – 1984, அம்மன் கோவில் கிழக்காலே – 1896, தழுவாத கைகள் – 1986, கூலிக்காரன் – 1987, பூமழை பொழியுது – 1987, உழவன் மகன் – 1987, நினைவே ஒரு சங்கீதம் – 1987, உள்ளத்தில் நல்ல உள்ளம் – 1988, பூந்தோட்ட காவல்காரன் – 1988, செந்தூரப்பூவே – 1988, நல்லவன் – 1988, என் புருஷன் எனக்கு மட்டும்தான் – 1989, பொன்மனச் செல்வன் – 1988, ராஜநடை – 1989, புலன் விசாரணை – 1990, சத்ரியன் – 1990, கேப்டன் பிரபாகரன் – 1991, மாநகர காவல் – 1991, சின்ன கவுண்டர் – 1992, பரதன் – 1992, ஏழை ஜாதி – 1993, சேதுபதி ஐபிஎஸ் – 1994, ஹானஸ்ட் ராஜ் – 1994, என் ஆசை மச்சான் – 1994, தாயகம் – 1996, உளவுத்துறை- 1998, கண்ணுபட போகுதய்யா – 1999, வானத்தைப்போல – 2000, வல்லரசு – 2000, ரமணா- 2002.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…
தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…
2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…