கடந்த 2002ஆம் வருடம் இயக்குனர் அசோகன் இயக்கத்தில் முரளி வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ் இந்த படத்தில் ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ராதா. இப்படத்தை செந்தில்குமார் இயக்கினார். படத்தின் கதை என்னவென்றால், ஓட்டை உடைசலான ஒரு டப்பா பேருந்தை வைத்துக்கொண்டு காமெடியாக படத்தை எடுத்திருப்பார்கள். தன் தந்தையை மோதிக் கொன்ற பேருந்தை நஷ்ட ஈடாகப் பெறுவார் முரளி.
அந்த பேருந்து தன அவருக்கு நடமாடும் வீடு. அவர் கூடவே அத்தை மகன் வடிவேலு. வங்கியில் கடன் வாங்கி அந்தப் ஓட்டை பேருந்தை ஃபாஸ்ட் ஃபுட் கடையாக்குவது தான் அவர்களுடைய லட்சியம். திடீரென ஒரு லம்பாடிப் பெண் அவர்களுடைய பேருந்தில் தஞ்சம் அடைவார். தந்தையின் போக்குப் பிடிக்காமல் ஓடிவந்து தஞ்சம் புகுந்தவர் என்பது முரளிக்குத் தெரிய வருகிறது.
அதற்கு முன்பாகவே முரளிக்கு வசந்தி மீது காதல் வேறு. இப்படியாக கதை நகரும். இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய புரொடியூசர் தங்கராஜ், படம் எடுத்து முடித்ததும் முரளிக்கு சம்பளத்தை கொடுத்துவிட்டு அவரிடம் படத்தை காட்டவே இல்லை. அவரிடம் நான் எதுக்கு காட்டணும். இதுக்கப்புறம் அவருக்கும் எனக்கும் எதுமே இல்லன்னு இருந்தேன். முரளி நடிகர் சங்க தலைவராக அப்போது இருந்த விஜயகாந்திடம் சென்று கம்பளைண்ட் செய்துள்ளார்.
நான் எப்போதும் சும்மா இருக்கும்போது நடிகர் சங்கத்திற்கு சென்று விஜயகாந்திடம் பேசுவேன். அப்போது ஒருநாள் அங்கு செல்லும்போது விஜயகாந்த் உன்மேல் நான் செம கோவத்தில் இருக்கேன்னு சொன்னார். நா காசெல்லாம் கொடுத்துட்டேன் அப்படின்னு சொன்னேன். ஆனா அவரு அது இல்ல முரளிக்கு ஏன் படத்தை காட்டல. அதெல்லாம் தப்பு காட்டுனு சொன்னாரு. அதுக்கப்புறம் நடிகர் சங்கத்தில் வைத்தே முரளிக்கு படத்தை போட்டு காட்டினார் விஜயகாந்த் என்று கூறியுள்ளார்.
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (35). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, சங்கரேஸ்வரி (30) என்ற மனைவியும்,…
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்…
கோயம்புத்தூரில் நடைபெற்ற மொபைல் ஷோரூம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த முன்னணி நடிகை திரிஷாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…
தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் வில உயர்த்தப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 28 முதல் புதிய விலைகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, ஒரு…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியலில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட ஆலோசித்து…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும்…