கடைசி வரை வடிவேலுவை மன்னிக்காத விஜயகாந்த்.. வெளியான பகீர் காரணம்..

By Sumathi

Updated on:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இப்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை 4.45 மணிக்கு கட்சி அலுவலகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடைசி வரை நடிகர் வடிவேலுவை மன்னிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

   

தமிழ்சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் சரியான படவாய்ப்புகளின்றி தவித்தவர்தான் நடிகர் வடிவேலு. அப்போது டாப் ஹீரோவாக இருந்த விஜயகாந்த், அவருக்கு சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். ஆனால் இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் நடிப்பதால் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர இயக்குர் ஆர்வி உதயகுமார் யோசித்துள்ளார். அப்போது விஜயகாந்த், என்னுடன் குடைபிடித்து நிற்கும் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி, படம் முழுக்க அவர் முகம் தெரிய வைத்து, ரசிகர்களிடம் வடிவேலுவை கொண்டு சேர்த்தவரே விஜயகாந்த் தான்.

அதன்பிறகு ரஜினி, கமல் படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமான வடிவேலு, விஜயகாந்துடன் நடித்த ஒரு படத்தில், இயக்குநர் சொன்ன டயலாக்கை பேசாமல் மாற்றி மாற்றி பேசியிருக்கிறார். பலமுறை விளக்கி கூறியும் வடிவேலு கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன், ஒரு அறை விட்டுள்ளார். அதற்கு பிறகுதான் விஜயகாந்தை தனக்கு எதிரியாக பார்க்க ஆரம்பித்தார் வடிவேலு. 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது.

அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வடிவேலு, விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தார். கேப்டன், எந்த கப்பலுக்கு இவர் கேப்டன் என விஜயகாந்தை கிண்டலடித்தார். ஆனால், எந்த இடத்திலும் எப்போதும் விஜயகாந்த், வடிவேலுவை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. அதேவேளையில் நன்றி மறந்த வடிவேலுவை கடைசி வரை மன்னிக்காமல் சென்றுவிட்டார் கேப்டன் விஜயகாந்த்.

author avatar
Sumathi