Categories: சினிமா

என்னைப் பார்த்து கால் மேல கால்தூக்கிப் போட்டு ஸ்டைலா உக்காந்தா… தன்னை அவமானப்படுத்திய நடிகை குறித்து பேசிய பாரதிராஜா!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.

ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான். அதனால் சிரஞ்சீவிக்குப் பதில் சுதாகரையே நடிக்க வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

பாரதிராஜா நடிப்பு சொல்லிக்கொடுத்து அதை சரியாக செய்யாத நடிகர்களை எல்லாம் அடித்துவிடுவார் என்று அப்போது சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் அவரால் அறிமுகப்படுத்த நடிகர்கள் அனைவரும் இப்போது வரை அவரைப் பற்றி பெருமையாகவே பேசி வருகின்றனர்.

ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி ஒரு நிகழ்ச்சியில் பாரதிராஜாவை அவமானப்படுத்தும்படி செய்தாராம். அதுபற்றி பேசிய பாரதிராஜா “கல்லுக்குள் ஈரம் படத்தில் நான்தான் விஜயசாந்திய அறிமுகப்படுத்தினேன். நடிப்பு ஒழுங்கா வர்லண்னு அடிச்சிருக்கேன். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு பெரிய ஹீரோயின் ஆனதும் ஒரு நிகழ்ச்சியில சந்திச்சப்ப என்ன அவ மதிக்கல.  கால் மேல் கால் போட்டு ஸ்டைலா உக்காந்திருந்தா. நானும் அவங்ககிட்ட அதுக்கப்புறம் பேசவேயில்ல.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

10 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

17 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

22 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

30 minutes ago

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

41 minutes ago

BIG BREAKING: “பதவியை ராஜினாமா செய் இல்லனா”…. மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மிரட்டல்?… வெளியான பகீர் ஆடியோ….!

திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…

48 minutes ago