“விஜய் பொண்டாட்டி எங்கே?.. ஆதவ் அர்ஜுனா சட்டையைக் கிழிப்போம்”… மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட திமுக பிரமுகர்….!

Spread the love

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் எதிரே நடைபெற்ற பிரம்மாண்ட நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, கூட்டணி தர்மத்தை மீறியதாகக் கூறி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தி மீதும், தமிழக முதல்வர் விஜய் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், முதல்வர் விஜய் பதவியேற்ற நிகழ்வைச் சுட்டிக்காட்டிய அனிதா ராதாகிருஷ்ணன், “விஜய் பதவியேற்ற போது அவர் மனைவியும், குழந்தைகளும் எங்கே போனார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சாடிய அவர், திமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். முந்தைய பாராளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியவர், “இனி வரும் காலங்களில் ராகுல் காந்தி முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் கரியைப் பூசுவார்களே தவிர, அவர் பிரதமராக முடியாது” என ஆவேசமாகப் பேசினார்.

மேலும் டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரின் தலையீடுகள் குறித்துப் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பே கூட்டணியை விட்டு வெளியேறாமல், திமுக தொண்டர்களின் உழைப்பால் ஐந்து இடங்களைப் பெற்றுவிட்டு இப்போது ஓடிப்போய் இணைந்திருப்பது துரோகம் என்றார். டெல்லியிலிருந்து வந்த கே.சி. வேணுகோபால் கேரளாவுக்குச் சென்று முதல்வர் பதவி கேட்டால் கொடுத்துவிடுவார்களா எனக் கேள்வி எழுப்பியவர், திமுகவை வீழ்த்த நினைப்பது வெறும் பகற்கனவு என்றும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் எச்சரித்தார்.

இறுதியாக ஆதவ் அர்ஜுனாவை ‘லாட்டரி காரன்’ என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றார். “அரசியல் பேசுங்கள், எங்களைக் குறை கூறுங்கள்; அதை விடுத்து எங்கள் இளம் தலைவரைத் தொட்டுப் பார்த்தால், தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழையும் போது உனது சட்டை கிழிக்கப்படும் நிலையை திமுக தொண்டர்கள் உருவாக்குவார்கள்” என்று பகிரங்கமாக எச்சரித்தார். மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 தருவதாகக் கூறிவிட்டு தராதவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், திருச்செந்தூர் தொகுதியை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது என்றும் சவால் விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

3 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

13 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

18 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

21 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

24 minutes ago