மணிமேகலையை தொடர்ந்து அமெரிக்காவில் குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்… யார் யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

By Archana on ஆனி 30, 2023

Spread the love

தொகுப்பாளராக அறிமுகமாகி பலருக்கும் பரிச்சயமான மணிமேகலை சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். தான் என்ன பொருள் வாங்கினாலும் சரி தன்னுடைய ரசிகர்களிடம் அதை சந்தோஷமாக கூறிவரும் மணிமேகலை. தான் கட்டி வரும் வீட்டைப் பற்றி அடிக்கடி பதிவு வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

   

தொகுப்பாளராகவே பார்த்து வந்த மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக அறிமுகமான பிறகு அவருக்கு ரசிகர்கள் பல மடங்கு அதிகமாகிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை செய்யும் செயல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஒரு சில நேரங்களில் இவர் செய்வது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

   

 

ஆனாலும் மணிமேகலை அதையெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை மீண்டும் தொகுப்பாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மணிமேகலை தான் அமெரிக்காவிற்கு செல்வதாக இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்பதிவு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டது. இது குறித்த முழுமையான விவரங்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

அதாவது மணிமேகலை அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளாராம். மேலும் அவருடன் டிஜே பிளாக், பிரவீன் பெண்ணட், ஆர்ஜே விஜய்,  கே பி ஒய் பாலா என விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.