Categories: சினிமா

என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. மாமியாரை அடிக்க போன கோபி.. கமலா எடுத்த அதிரடி முடிவு..!

Spread the love

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க என்று கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்றைய எபிசோடில் கோபியின் ரெஸ்டாரண்டுக்கு வரும் செந்தில் ஊழியர்களிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கோபியிடம் கேள்வி கேட்கிறார். பின்னர் பிசினஸை நீ இழந்து விட்டால் மறுபடியும் ரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

இதற்கிடையில் ராதிகாவின் அம்மா கமலா கோபி தன்னை அடிக்க வந்ததை எண்ணி அழுது கொண்டிருக்கின்றார். அவரை சமாதானப்படுத்த வரும் ராதிகா தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் என் மீதும் மையும் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருந்த இவர் எப்படி இப்படி மாறிப் போனார் என்று நினைத்து அழுகின்றார். இதைப் பார்த்த கமலா முதல் வாழ்க்கை தான் உனக்கு சரியாக அமையவில்லை.

இரண்டாவது வாழ்க்கை அது அவருடன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கோபியை வற்புறுத்தி உனக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் உன் வாழ்க்கை இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை என கோபப்படுகிறார். இதற்கிடையில் கும்பகோணத்தில் தனது சிறு வயது தோலியான சாவித்திரியுடன் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கின்றார் ஈஸ்வரி. இப்படி இருக்க மறுபுறம் ஜெனி பாலை அடுப்பில் வைத்துவிட்டு குழந்தையை கவனிக்க செய்கின்ற விடுகிறார்.

இதனால் பால் பொங்கி அடுப்பு அணைந்து கேஸ் வழியாக தொடங்குகிறது. பின்னர் சமையலறைக்கு வந்த அமிர்தா நடப்பதை பார்த்து உடனடியாக அடுப்பை அணைத்து ஜன்னலை திறந்து விடுகின்றார். மேலும் ஜெனியிடம் சென்று கோபத்தை காட்டுகிறார். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க இதை பார்த்த எழில் மற்றும் செழியன் அவர்களை சமாதானப்படுத்துகின்றார்.

இதைத்தொடர்ந்து கிச்சனிலிருந்து வீட்டுக்கு வந்த கோபி ராதிகா வீட்டில் இல்லாததை குறித்து கேள்வி எழுப்ப கமலாவோ வீட்டில் நிம்மதி இல்லை. அதனால் ராதிகா வெளியில் சென்று விட்டார் என்று கூறுகின்றார். அவளை எதற்கு வெளியில் அனுப்பினீர்கள் என்று கோபி கோபமாக கேட்க கொலைகார மாமியார், குடிகார புருஷன் மத்தியில் அவள் என்ன செய்வாள் என்று கேட்க மீண்டும் கோபி கோபப்படுகின்றார். மேலும் வரும் எபிசோடில் கமலா ஆத்திரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சென்று ஈஸ்வரி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார். காவல்துறையினரும் பாக்கியா வீட்டிற்கு சென்று ஈஸ்வரியை கேட்கிறார்கள். இனி ஈஸ்வரியை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahalakshmi

Recent Posts

“7 ஸ்டார் ஹோட்டலே தோற்றுவிடும்!.. மசாஜ் நாற்காலி முதல் கோல்ஃப் வரை… கூகுள் ஊழியர்களின் மெனு கார்டைப் பார்த்தால் வயிறு எரியும்… இணையத்தில் வைரலாகும் வீடியோ”…!!!

பெங்களூருவில் உள்ள கூகுளின் 'அனந்த்' அலுவலகத்தை அர்பிதா என்ற இளம்பெண் டிஜிட்டல் முறையில் சுற்றிக் காட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில்…

2 minutes ago

“அவர் செத்தா எனக்கு வேலை கிடைக்கும்!”… அரசு வேலைக்காக கணவனையே தீர்த்துக்கட்டிய மனைவி… சினிமா பாணியில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ரவீந்திர குல்மேத்தே என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கூலிப்படையை…

11 minutes ago

BIG BREAKING: விஜய் அழைப்பு விடுத்தார்… தமிழக அரசியலில் திக் திக் நிமிடம்….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில்,…

14 minutes ago

“6 சிலிண்டர், ரூ.2,500 பணம் எல்லாம் ஓகே… 1 சவரன் தங்கம் எப்படி முடியும்?”… விஜய் வாக்குறுதிக்கு செக் வைத்த தராசு ஷ்யாம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில்,…

22 minutes ago

“சாப்பாடா? விஷமா?.. அரசுப் பள்ளி மதிய உணவில் மிதக்கும் சிலந்திகள்… அலறியடித்த பெற்றோர்கள்… பீகாரில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை”…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட…

22 minutes ago

“அலறிய அக்கம்பக்கத்தினர்… நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டாய் சரிந்த 3 மாடி வீடு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… கோட்டாவில் நேர்ந்த திகில் விபத்து”…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள குமானபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லபாரி பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று மாடி…

32 minutes ago