Categories: சினிமா

ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்.. அதற்கு அவர் சொன்ன காரணம்.. இயக்குனர் சங்கர் சொல்லியும் கேட்கலையா..?

Spread the love

கமல் மற்றும் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் சங்கர் ஒரு படத்தை இயக்க எண்ணியதாகவும் அது நடக்காமல் போனதாக அவர் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் ரஜின- கமல். ரஜினி அவர்களுக்கு முன்பே கமலஹாசன் நடிக்க வந்திருந்தாலும் ஒரு காலத்தில் கமலை பின்னுக்கு தள்ளி ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தார். ரஜினி நடிக்க வந்த காலத்தில் கமலஹாசன் மிகப்பெரிய ஸ்டார் அதனை பலமுறை அவரே கூறி இருக்கின்றார். அப்படி இருந்தும் நடிகர் கமல் ரஜினியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், அவள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிக்க முடிவு செய்த பிறகு தனி தனியாக நடித்து வந்தார்கள். பல ஆண்டுகள் ஆகியும் இருவரும் சேர்ந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் கமலஹாசன் மற்றும் ரஜினியை சேர்த்து ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது விருப்பத்தை கூறி வருகிறார்கள். இதனை பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. ஏன் இயக்குனர் சங்கர் கூட அதனை முயற்சி செய்ததாகவும் இந்தியன் டூ படப்பிடிப்பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது “கமல், ரஜினி இருவரையும் வைத்து எப்போது ஒரு படம் எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சங்கர் எந்திரன் 2.0 படத்தில் அப்படி திட்டமிட்டோம். ஆனால் கமல் சாரிடம் அப்போது கால் சீட் இல்லை. அந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அவரை அணுகினோம்.

ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். எனவே தான் படம் முழுக்க ரஜினி நடித்தார்” என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்தியன், சிவாஜி, முதல்வன் என மூன்று கதா பாத்திரங்களையும் ஒரே திரைப்படத்தில் கொண்டுவர திட்டமிட்டு இருந்தேன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சங்கர் கூறியிருந்தார். இது தொடர்பாக கமலஹாசனும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ரோபோ 2.0 படத்தில் வில்லனாக நடிக்க ஷங்கர் என்னை அணுகி இருந்தார். அப்போது நான் ஒரு சிக்கலில் இருந்ததால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அவரிடம் இன்னும் ஹீரோவாக சில திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவித்தார்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: விஜய் பதவியேற்பு விழா… தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வந்தது குட் நியூஸ்…!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான…

10 minutes ago

எடப்பாடி தலையில் பேரிடி… அதிமுகவை உடைக்கும் சி.வி.சண்முகம்?… விஜய்க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள்…. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

15 minutes ago

“எடப்பாடிக்கே பதவிப் பிரமாணம்”…. லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி?… சட்டசபை வரலாற்றில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…

24 minutes ago

“விஜய்க்கு அதிமுக ஆதரவு கொடுக்குமா?… செய்தியாளர் கேள்விக்கு சி.வி.சண்முகத்தின் ‘பளீச்’ பதில்!… கோட்டையில் நடக்கப்போகும் ‘அந்த’ ட்விஸ்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

24 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…. திமுக, அதிமுக-வின் 1 கோடி ஓட்டுகளை ‘சைலண்டாக’ தட்டித்தூக்கிய விஜய்… தவெக செய்த தரமான சம்பவம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரங்கேறியுள்ளது.…

34 minutes ago

“முதலமைச்சராகும் விஜய்!… முதல் கையெழுத்திடப்போகும் அந்த 2 முக்கிய கோப்புகள் எது?… தமிழகமே எதிர்பார்க்கும் ‘மெகா’ அறிவிப்பு”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…

38 minutes ago