வேலூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். தனது உரையில் ஆவேசம் காட்டிய அவர், “இந்தத் தேர்தல் மக்களுக்கும் திமுகவுக்கும் இடையேயான போர்; ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிரான போர்” என்று முழங்கினார். மேலும், “நான்தான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் விஜய்” என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசியல் யுத்தம் தமக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையேயானது என்றும், திமுகவுக்கு நேரடிப் போட்டி தவெக தான் என்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்தார்.
தற்போதைய திமுக ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய், “தமிழ்நாடு நம்பர் ஒன் என்பது பழைய டப்பாவை உருட்டுவது போன்றது” என்று கிண்டல் செய்தார். காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் காலத்தில்தான் தமிழகம் முதன்மையாக இருந்ததாகவும், தற்போது இந்த ஆட்சி “ஸ்டாண்ட்-அப் காமெடி” செய்பவர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் சாடினார். ஊழலைப் பற்றி தாம் வெளிப்படையாகப் பேசுவதால், அனைத்துக் கட்சிகளும் தமக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளதாகவும், அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே தன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவையும் விட்டுவைக்காத விஜய், “நாங்கள் ‘தீய சக்தி’ என்று யாரைச் சொல்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இடையில் சிலர் தானாக முன்வந்து (வாண்டடாக) வண்டியில் ஏறி காமெடி செய்கிறார்கள்” என்று மறைமுகமாக எள்ளி நகையாடினார். சீரியஸான அரசியலில் இதுபோன்ற குறுக்கீடுகளுக்கு தமக்கு நேரமில்லை என்று குறிப்பிட்ட அவர், களத்தில் தவெகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தனது உரையை அமைத்திருந்தார். விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…
தமிழகத்தில் இன்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in…
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று…