தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. எத்த்னை பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு விஜய் முன்னேறி வருகிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர், தன்னுடைய மகன் எம்ஜிஆரின் இடத்தை பிடிப்பார் என மறைமுகமாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு தனக்காக எந்தவொரு சொத்தும் சேர்த்து வைக்கவில்லை. அவர் தனக்காக வாழவில்லை. மறைந்தும் வாழ்கின்ற அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பது அரிது. இன்று எம்ஜிஆரின் இடத்தை பிடிப்பதற்காக ஒருவர் பயணப்பட்டு கொண்டு இருக்கிறார். அவர் என்னுடைய மகன் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…