தமிழக அரசியலில் முன்சப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) 108 இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி இன்றி தவித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுக்க, பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கூட்டணி ஆட்சி குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தக் கூட்டணி நகர்வை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. “மறுதேர்தலைச் சந்திக்கத் தமிழகம் தயாராக இல்லை, நிலையான ஆட்சி அமைவதே நோக்கம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் சாய்ந்தது திமுகவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தனது எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு அதிமுகவின் கோரிக்கையை ஸ்டாலின் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். திமுக மற்றும் அதிமுகவின் மொத்த பலம் 121 ஆக இருப்பதால், இவர்கள் இணைந்தால் மிக எளிதாக மெஜாரிட்டியை நிரூபித்துத் தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சியை மலரச் செய்ய முடியும்.
விஜய்யின் அரசியல் வருகை, எம்.ஜி.ஆர் காலத்தைப் போல நீண்ட காலத்திற்குத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைச் சரித்துவிடுமோ என்ற அச்சம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிற்குமே உள்ளது. இந்த ஒரு பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காகவே, கொள்கை ரீதியாக மாறுபட்ட இரு கட்சிகளும் திரைமறைவில் காய் நகர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிப்பார் என்பதால், விஜய்க்கு இருக்கும் அந்தச் சிறு இடைவெளியைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
தற்போதுள்ள அரசியல் சூழலில், திமுக தனது கூட்டணியில் உள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதே நேரத்தில் அதிமுகவுடன் இணக்கமான முடிவை எடுக்கவும் ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விஜய்யால் மெஜாரிட்டி காட்ட முடியாவிட்டால், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக திமுகவும் அதிமுகவும் இணைந்து ஓர் ஆட்சியை அமைக்கும் அல்லது ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்கும் விசித்திரமான நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலி, போட்டிக்கு முன்னதாக லக்னோ அணி வீரர்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்தார். குறிப்பாக,…
இத்தாலியைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் மிரேலா கிறிஸ்டினா முராரியு இந்தியாவில் திறந்தவெளி ஜீப்பில் வனவிலங்குச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூக்களால்…
வழக்கமாக இந்தியத் திருமணங்கள் பல மாதங்கள் திட்டமிடப்பட்டு, பெரும் பொருட்செலவில் நடத்தப்படும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும், பெரும்பான்மைக்குத்…
ஜோதிட சாஸ்திரப்படி, செல்வத்திற்கும் செழுமைக்கும் அதிபதியான சுக்கிரன், செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த இடமாற்றம் ராசி…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள்…