Categories: சினிமா

அந்த 2 படத்துல நடிக்க துபாயில் இருந்து நான் போட்டோ அனுப்பிருக்கேன்.. நினைவுகளை பகர்ந்த மக்கள் செல்வன்…!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் தான் மகாராஜா படத்தையும் இயக்கியுள்ளார். இதனை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதில் நடராஜ், முனீஸ் காந்த், சிங்கம்புலி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருக்கும் பூர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. வருகிற 14-ஆம் தேதி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ராம் பாடிய பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

இந்த நிலையில் மகாராஜா படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது விஜய் சேதுபதி கூறியதாவது, எனக்கு 21 வயது இருந்த போது துபாய்க்கு வேலைக்கு சென்றேன். குடும்பத்தின் வறுமையை போக்க வேலைக்கு வந்தேன். வெளிநாட்டில் வேலை செய்கிறோம் என்பதற்காக நான் ஜாலியாக இல்லை. வியாழக்கிழமை அனைவரும் ஒன்றாக இணைந்து கறி சமைத்து சாப்பிடுவோம்.

கிரிக்கெட் விளையாடுவோம். 21 வயது இளைஞனுக்கு அங்கு கனவு காண நேரம் இருக்காது. புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனபோது நான் 21 வயதில் பட்ட கஷ்டங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். மேலும் 5 ஸ்டார் படத்திற்கும் பாய்ஸ் படத்திற்கும் ஆடிஷனுக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தபோது நான் துபாயில் இருந்தே எனது போட்டோவை அனுப்பினேன் என எமோஷனலாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago