Categories: சினிமா

இன்று மக்கள் மனதில் மக்கள் செல்வனாகி நிற்கும் VJS… அன்று என்னென்ன வேலைகள் செஞ்சிருக்காரு தெரியுமா…?

Spread the love

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். ஆரம்பத்தில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. பின்னர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பை முறையாக கற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து நானும் ரவுடிதான், சேதுபதி, 96, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் என பலதரப்பட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வயதான தோற்றம் வில்லன் என தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் எந்த அந்தஸ்தை பெற்றார். இவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் கூட நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார்.

இப்படி இருக்க சினிமாக்கு வருவதற்கு முன்பாக இவர் ஏகப்பட்ட வேலைகளை பார்த்துள்ளார். அதாவது சென்னை கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்த இவர் சினிமாவுக்கு ஆரம்பத்தில் முயற்சி செய்தபோது அவருடைய கதவுகள் திறக்கவில்லையாம். நம்மவர் படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு அதில் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேறு வேலையும் செய்ய முடிவு எடுத்துள்ளார்.

அப்படியே அவர் முதன் முதலில் சேல்ஸ்மேன் வேலையை செய்துள்ளார் .அடுத்து போன் பூத் ஆப்பரேட்டராக வேலை செய்தார்.  பிறகு ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். துபாய்க்கு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் சில வருடங்கள் கணக்காளராக பணியாற்றினார்.

Soundarya

Recent Posts

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

6 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

7 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

13 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

28 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

37 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

56 minutes ago