தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், குணச்சித்திர வேடம், வில்லன் என வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ மற்றும் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் முரட்டு வில்லனாக மிரட்டியுள்ளார். தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜெசி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்கிற மகன் மற்றும் ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, 2015 ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில், விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சிந்துபாத், ஜூங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தன் தந்தையை போல் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.
லயோலா கல்லூரியில் படித்து பட்டம்பெற்றுள்ள சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்குகிறார். அவரும் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்துக்கு பீனிக்ஸ் (வீழான்) என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் முதல் படத்திலேயே சூர்யா சேதுபதி மாஸ் ஹீரோவாக அறிமுகமாவது உறுதியாகி உள்ளது. மேலும் படத்தின் டைட்டில் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பீனிக்ஸ் படத்திற்கு சாம் சி.எஸ். தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜ் மேற்கொள்ள உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பதை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. தற்பொழுது இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…