#image_title
பான் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் டிரைலர் புர்ஜ் கலிபா வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஒரு காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
எந்த வித ரோலாக இருந்தாலும் அசால்டாக நடித்து அசத்தும் நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் சுதாரித்து கொண்ட விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க கூடாது என முடிவெடுத்து மீண்டும் ஹீரோவாக கலக்கி வருகின்றார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐம்பதாவது திரைப்படம் தான் மகாராஜா. குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய நித்திலன் இந்த படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கின்றது. வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
ரிலீஸ் தேதி மிக அருகில் நெருங்கி வருவதால் படக்குழுவினர் முழுவீச்சில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பிரீமியர் துபாயில் இருக்கும் சிலிக்கான் சென்ட்ரல் மாலில் நேற்று வெளியானது. மேலும் துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் மகாராஜா படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. விஜய் சேதுபதியின் 50-வது படம் என்பதால் இதை விஜய் சேதுபதி தான் செய்ய சொன்னாராம். மேலும் 3 நிமிடம் ஒளிபரப்பானதற்கு 75 லட்சம் அதுமட்டுமில்லாமல் இங்கிருந்து போவதற்கு வருவதற்கு என கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவானது.
இதனால் தயாரிப்பாளர் சற்று சோகத்தில் இருக்கின்றார். இதனை சம்பளத்தில் கழித்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் கூறியதற்கு அது வேறு இது வேறு என்று கூறிவிட்டாராம். விஜய் சேதுபதி தன்னுடைய ஆசைக்காக தயாரிப்பாளருக்கு ஒரு கோடி வரை செலவை இழுத்து விட்டு இருக்கின்றார்.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…