அவுங்களுக்காக பண்ண போய் கடைசில அது எனக்கே பிரச்னையா வந்து.. இனிமே அப்டி பண்ண மாட்டன்.. வேக்சான் விஜய் சேதுபதி..

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த கலைஞர்களாக சிலர் அவ்வப்போது வருகின்றனர். அப்படிப்பட்டவர்களின் வரிசையில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. எந்தவிதமான கேரக்டர்களில் நடிக்க கூடிய இவர் துணை பாத்திரங்களில் முதலில் நடித்தார். பின்னர் கதாநாயகனாக மாறினார். அதன்பின் பேட்ட படத்தில் ரஜினிக்கு, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு, விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. எனினும் இனி வில்லன் நடிப்பு வேண்டாம் என அதற்கு புல் ஸ்டாப் வைத்துவிட்டார். இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

   

இந்தியில் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் பிரமோ நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி கூறியதாவது, ஹீரோ, வில்லன், கெஸ்ட்ரோல், கேமியோ ரோல் என மாறி மாறி நடிப்பது எனக்கு பயமாக தான் இருக்கிறது. ஆனால் இந்த ரோல்களில் நடிக்க அணுகுபவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். நான் இதுவரை நோ சொன்ன கெஸ்ட் ரோல் 20க்கு மேல் இருக்கும். நான் அதை நிப்பாட்டிட்டேன். ஒரு ஸ்டேஜூக்கு மேல் அது வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். முன்னாடி, இப்படி பல கேரக்டர்களில் நடிப்பது குறித்து முன்னாடி எனக்கு வேறு ஒரு பார்வை எனக்கு இருந்தது. நான் இரண்டு நாள், மூன்று நாள் ஒரு படத்தில் நடிப்பது, அந்த படத்துக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்றால், அது தவறில்லையே என்றுதான் ஒத்துக்கொண்டேன். இதனால் தானே நான் பிழைக்கிறேன்,என்றுதான் அப்போது என் எண்ணமாக இருந்தது.

 

இது ஒரு கட்டத்தில், எதுனாலும் இவரைக் கூப்பிடுங்க, என நான்கு பேர் வர ஆரம்பித்துவிட்டனர். அதனால், நோ சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம், இப்படி நடித்ததால் நான் ஹீரோ என்று நடித்து வரும் படங்களையும் அது பாதித்தது. அதை வேணாம் என்று நிறுத்தி விட்டேன். அப்புறம் கதையை கேட்டுட்டு ஓகே, இல்லைன்னு சொல்லுங்கன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இதற்கு நிறைய நேரம் ஒதுக்கி என்னால் கதை கேட்க முடியவில்லை. அதனால் கோவா திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட போது இனிமேல்

வில்லன், கேமியோ ரோல்களில் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். என்று அந்த நேர்காணலில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். அதாவது மற்றவர்கள் நடித்த படங்களுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்து விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல்களில் நடித்ததால், ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்களையே கெஸ்ட் ரோல் படங்களாக நினைவுக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனநிலை மாறியது. இது அவரது சினிமா பயணத்தையே கேள்விக்குறியாக்கியதால், இந்த முடிவுக்கு விஜய் சேதுபதி இப்போது வந்திருக்கிறார்.

author avatar
Sumathi