Categories: CINEMA

புதிய கெட்டப்பில் வந்து மிரட்டிய விஜய் சேதுபதி.. ஆள் அடையாளமே தெரியல.. அந்த சூப்பர் ஹிட் படத்திற்காக இருக்குமோ..?

முன்னணி கதாநாயகரான விஜய் சேதுபதி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு முன்பு விஜய் சேதுபதி பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தான் விஜய் சேதுபதி யார் என்பதை அறிய முக்கியமாக இருந்தது.

இதனையடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மக்கள் செல்வன் என் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் யதார்த்தமான பேச்சு, நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. திரையுலகில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து விஜய் சேதுபதி மிரட்டி வருகிறார்.

அதன்படி விக்ரம் வேதா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம், சூரியின் விடுதலை, ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி இயக்குனர் அமீர் திறந்த உணவகத்தின் சிறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட காட்சிகளை காண்பிக்கவுள்ளனர். இதன் படபிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி எந்த படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் விடுதலை 2 படத்தின் வாத்தியார் கேரக்டராக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Priya Ram
Priya Ram

Recent Posts

குடும்பத்தில் குட்டையை குழப்பிய பெயர்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் ரியல் மகளா இது..? வெளிவந்த உண்மை..!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…

13 mins ago

10-ம் வகுப்பு ரிசல்ட்.. பாட்டால் சரியாகப் படிக்க முடியல.. சூப்பர் சிங்கர் ஹர்ஷினி எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக…

44 mins ago

26 -வது படம்.. சொல்லி வச்ச மாதிரி தன்னை விட 26 வயது குறைவான நடிகையுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி..!

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான…

1 hour ago

12 வருஷம் ஆயிடுச்சு கண்ணம்மா.. திருமணம் என் வாழ்க்கையில் எடுத்த சரியான முடிவு.. திருமண நாளில் பிரசன்னா போட்ட உருக்கமான பதிவு..!

திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா வெளியிட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

2 hours ago

நண்பனின் ‘ஸ்டார்’ படத்தை காதலியுடன் பார்க்க வந்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.. வைரல் புகைப்படம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரதீப் ஆண்டனி தனது காதலியுடன் கவின் நடித்த 'ஸ்டார்' படத்தை பார்க்க சென்றுள்ள…

2 hours ago

தலைகீழ நின்னு தண்ணீர் குடித்தாலும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மாறாது… எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 கிளிஷே சீன்கள்… சிரிப்பு கியாரண்டி!

எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள்…

2 hours ago