“பிப்ரவரி 2nd வீக் No… பிப்ரவரி Last வீக் Yes”….. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய விஜய்…. அதிரப்போகும் தமிழகம்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் நடத்த திட்டமிட்டிருந்த மக்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டம், பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் விஜய் மேற்கொண்டு வரும் இந்தச் சுற்றுப்பயணம், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அகரம்சேரி பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 25,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் அமையும் இந்த மைதானத்தை தற்போது தவெக நிர்வாகிகள் சீரமைத்து வருகின்றனர். போதிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை விஜய் வெற்றிகரமாக நடத்தினார். இந்நிலையில், கரூர் சம்பவத்திற்குப் பின் தமிழகத்தின் மிக முக்கியமான மண்டலமாக வேலூரில் நடைபெறும் இந்தச் சந்திப்பை எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிக பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

அரசியல் களத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க விஜய் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அவரது சுற்றுப்பயணங்கள் தள்ளிப்போவது தொண்டர்களிடையே ஒருவித ஏமாற்றத்தை அளித்தாலும், முறையான திட்டமிடலுடன் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதே நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. பிப்ரவரி இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள இந்த வேலூர் பொதுக்கூட்டம், விஜய்யின் அரசியல் நகர்வுகளின் அடுத்தக்கட்ட முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago