பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்… அதிமுக காலி?… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ சீனியர் அரசியல்வாதி…. பரபரக்கும் அரசியல் களம்…!

Spread the love

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடி அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் 108 இடங்களை மட்டுமே பெற்று, தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். தொடக்கத்தில் இந்த ‘கூட்டணி அரசு’ ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்ற பலத்த சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவை மட்டுமே நம்பியிருக்க விரும்பாத தவெக, சட்டப்பேரவையில் தனது சொந்தப் பலத்தை அதிகரிக்கப் போட்ட கணக்குகள் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வுக்குள் வெடித்த உட்கட்சி மோதலும் பிளவும் தவெகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கி, நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அளவுக்குச் சென்றது. இவர்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் மற்றும் தவெகவின் “தூய அரசியல்” இமேஜ் பாதிக்கப்படக் கூடாது என்பதால் விஜய் தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் உச்சமாக, தற்போது மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.

இந்த நகர்வை எதிர்க்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு தரப்புமே “குதிரைப் பேர அரசியல்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. கீழ்த்தளத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, மேல்தளத்தில் தவெகவில் இணைத்துக் கொள்ளும் தந்திரத்தை விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். தவெகவின் இந்த அதிரடி ஆட்டம் எதிர்க்கட்சிகளை மட்டுமன்றி, தற்போதைய தவெக அரசின் கூட்டணிக் கட்சிகளையும் பெரும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போன்ற கூட்டணிக் தலைவர்களே இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், “இன்று அ.தி.மு.க… நாளை நமது கட்சியாகக் கூட இருக்கலாம்” என்ற அச்சம் கூட்டணிக்குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒட்டுமொத்த நகர்வுகளுக்குப் பின்னணியில் தவெகவின் நீண்டகாலப் பெரும்பான்மைத் திட்டம் ஒளிந்திருக்கிறது. விரைவில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, கூட்டணி ஆதரவு ஏதுமின்றி தவெகவை ஒரு தனிப்பெரும்பான்மை அரசாக மாற்றுவதே விஜய்யின் பிரதான வியூகம் எனக் கூறப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளானுக்குப் பின்னால் அனுபவமிக்க செங்கோட்டையன் மாஸ்டர்மைண்டாக இருந்து செயல்படுகிறார் என்றும், இது பா.ஜ.க.வின் பழைய பாணி அரசியல் என்றும் அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. எது எப்படியோ, விஜய்யின் இந்தத் தற்போதைய அதிரடி நகர்வு வெறும் ‘நம்பர் பாலிடிக்ஸ்’ தானா அல்லது தமிழக அரசியலில் தவெகவின் நீண்டகால ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவதற்கான ஆக்ரோஷமான தொடக்கமா என்பதை வரப்போகும் இடைத்தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

Nanthini

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

1 minute ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

4 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

13 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

20 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

25 minutes ago