தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்த நிர்வாகிகளுக்கான நேர்காணலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று தொடங்கினார். சுமார் 60 முக்கிய நிர்வாகிகளிடம் தனித்தனியாகவும், மண்டல வாரியாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரின் செல்வாக்கு, நிதி வசதி மற்றும் சமூகப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.
இந்த நேர்காணலின் போது நிர்வாகிகளிடம் பேசிய விஜய், “உங்களுக்காகவே நான் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்; தேர்தலில் வெற்றி பெற்று உங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், தேர்தல் களத்தில் எதிர்கொள்ளும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாளிப்போம் என அவர் நம்பிக்கை அளித்தார். இந்தச் சந்திப்பின் போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நேர்காணலில் பங்கேற்ற 60 நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்த விரிவான ‘டேட்டா’ அடங்கிய கோப்புகள் வழங்கப்பட்டன. அதில் அந்தந்த தொகுதிகளின் பூத் கமிட்டி வலிமை, அடுத்த 30 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்தத் தரவுகளைக் கொண்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிடுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர் பட்டியலின் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதேவேளையில், தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டாலும், அது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் அவர் போட்டியிடும் தொகுதிகள் (ஒன்று அல்லது இரண்டு) அறிவிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரியா வில்சன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட முக்கியப் பெயர்கள் முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…