தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் போட்டி நிலவிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்ததால் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.
இதனிடையே நாளை புதுச்சேரி செல்லும் வழியில் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாப்பிக்காக இருக்கும். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது விஜய் சந்திக்கவில்லை என்பதை ராமதாஸ் நாசுக்காக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது துணிச்சலான பேச்சுக்களால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர்.…