கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே விபத்து தொடர்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய தலைவர்களான N. ஆனந்த், CTR நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகள் தொய்வின்றி தொடர 20 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை தான் விரைவில் சந்திக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…