“திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அவுட்?”… முதல்வர் விஜய் கொடுத்த அந்த ‘மகா ஆஃபர்’… அதிர்ந்து போன அறிவாலயம்….!

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையேயான 45 நிமிட திடீர் சந்திப்புதான். திமுக கூட்டணியில் மதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் சூழலில், தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவியேற்பை உதாரணம் காட்டி, முதல்வர் விஜயின் பதவிப்பிரமாண நிகழ்வை வைகோ வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கையையும், ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள தனது நாடாளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பையும் விஜயிடம் வைகோ முன்வைத்துள்ளார், இதற்கு முதல்வரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த சந்திப்பின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருப்பதாகவே மதிமுக மற்றும் தவெக வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில், வைகோவின் இல்லத்திற்கு தவெக தரப்பிலிருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று பேசியுள்ளார். வைகோ மீது முதல்வர் விஜய்க்கு இருக்கும் தனிப்பட்ட மரியாதையையும், அவரை அரசியலில் உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர் எடுத்துரைத்த பிறகே, இந்த முக்கிய சந்திப்பு சாத்தியமாகியுள்ளது. தமிழக அரசியல், திராவிட இயக்க வரலாறு மற்றும் கருணாநிதியுடனான வைகோவின் உறவு எனப் பல விஷயங்கள் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நெருக்கத்தின் விளைவாக, மதிமுக திமுக கூட்டணியை விட்டு விலகும் பட்சத்தில், வைகோவுக்கு தவெக ஆதரவுடன் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்ற மிகப்பெரிய அரசியல் ஆஃபர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. வைகோவின் நீண்டகால அரசியல் அனுபவத்தையும், தேசிய அளவில் அவருக்கு இருக்கும் மதிப்பையும் பயன்படுத்தி அவரை தன்பக்கம் இழுக்க தவெக திட்டமிடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த புதிய கூட்டணி மதிமுக நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வைகோ, “யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று மழுப்பினாலும், எம்எல்ஏக்களில் ஒருவர் ராஜினாமா செய்ய விரும்பவில்லை என கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வைகோ இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானம் காக்கிறார். இந்த விஜய் – வைகோ சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானதுதானா அல்லது தமிழக அரசியலில் ஒரு புதிய மெகா கூட்டணிக்கான தொடக்கமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

33 minutes ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

43 minutes ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

54 minutes ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

1 மணத்தியாலம் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

1 மணத்தியாலம் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 மணத்தியாலம் ago