உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு போன் கால்… லெபனானில் திடீரென நிறுத்தப்பட்ட போர்… பின்னணியில் அமெரிக்கா செய்த மாஸ்டர் பிளான்… மத்திய கிழக்கில் இனி என்ன நடக்கும்..?

Spread the love

மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர முடியாது என அறிவித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்காவின் தீவிர தூதரக முயற்சிகளின் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே தற்போது புதிய போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், தடைபட்டிருந்த அமெரிக்கா – ஈரான் மத்தியிலான ஜெனிவா அமைதிக் கூட்டம் மீண்டும் துவங்குவது உறுதியாகியுள்ளது.

லெபனானில் அண்மைக் காலமாக அதிகரித்த வந்த இஸ்ரேலின் வன்முறை சம்பவங்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி முயற்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருந்த நிலையில், இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8:30 மணி) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு தங்களைத் தாக்காதவரை தங்களுக்கு அது போர் காலம் அல்ல என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள போதிலும், இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு லெபனானில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர் நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் சுமார் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாலை 5 மணிக்குப் பிறகு எவ்விதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பது இருதரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 4:50 மணிக்கு தாக்குதல்கள் நடந்ததாக லெபனான் கூறியதை இஸ்ரேல் ராணுவம் மறுத்தாலும், மாலை 5 மணிக்கு மேல் அமைதி நிலவுவதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆரம்பகட்ட குழப்பங்கள், எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் ஆயுள் மற்றும் உறுதித்தன்மை குறித்து சர்வதேச அரங்கில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 2 முதல் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகளில், 746 மருத்துவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 3,912 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், ஹிஸ்புல்லாவுடனான சண்டையில் இஸ்ரேல் தரப்பில் குறைந்தது 32 ராணுவ வீரர்களும், 4 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இந்த பெரும் உயிர்ச்சேதங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள தற்போதைய போர் நிறுத்தம், மத்திய கிழக்கின் நீண்டகால மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு மிக முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

3 minutes ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 minutes ago

அடபாவேமே..! அந்த குழந்தை யாருடையது?… 25 வருஷ ரகசியம் அம்பலம்… குழந்தையை மறுக்கும் அதிமுக நிர்வாகி… வெளிவந்த பகீர் உண்மை…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் ராஜு மீது அவரது உறவினர் பெண்…

9 minutes ago

ஐயோ பாவம்!.. 5 நாள் மர்மம் உடைந்ததா?… 50 கி.மீ பயணம்… 8 வயது சிறுமி தப்பியோடியது ஏன்?… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கருமாங்கழனி பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர்…

18 minutes ago

“5 வருட உழைப்பு.. எல்லாம் போச்சு…” பிரபல நிதி இன்ஃப்ளூயன்சர் ஹரிஷின் கடைசி வீடியோ… பணம் பறித்து மிரட்டியதாக புகார்… பகீர் சம்பவம்…!!

சென்னையில் 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிதி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களை…

22 minutes ago

வீட்டில் மர்ம மரணம்… சிக்கிய 3 மாத்திரைகள்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிக்கிய வளர்ப்பு தந்தை… வெளியான பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் என்ஃபீல்டு பகுதியில், ஈவ் ரோஜர்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில்…

27 minutes ago