தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சினிமாவில் தனது கடைசி படமாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் விஜய் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்திற்கு விஜய் சம்பளம் மட்டுமே 275 கோடி. படத்தின் போஸ்டர் எம்ஜிஆர் ஸ்டைலில் இருப்பதால் இது ஒரு அரசியல் படமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மலேசியாவில் ஜனநாயகன்படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தெரிகிறது. தனது சினிமா பயணத்தின் கடைசி திரைப்படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவிற்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்டவரை அழைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…