தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாக தன் பயணத்தை தொடங்கியுள்ளார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ளார். இதுவரை தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் நடந்த சம்பவத்தால் விஜய் கட்சி பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தன்னந்தனியாக நின்று 2026 தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ECI நாட விஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆதவ் அர்ஜுனா என்று டெல்லி செல்ல உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் விசில், கிரிக்கெட் பேட், கப்பல் மற்றும் ஆட்டோ ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளது. அதில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு எந்த சின்னம் கிடைக்கும் என்பதை மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்)…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு…
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல்…
தமிழ்நாட்டில் மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்…
சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…