#image_title
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அஜித்தின் 63-வது படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக படம் எடுப்பதில் தாமதமானது. இந்த நிலையில் தனி ஒருவன் படத்தின் கதையை ஓரம் வைத்துவிட்டு அடுத்த படத்தை எடுக்க மோகன் ராஜா ஆர்வமாக உள்ளாராம்.
அஜித்தை சந்தித்து மோகன் ராஜா ஒரு சூப்பரான கதையை கூறியிருக்கிறார். கதை கேட்டவுடன் அஜித்திற்கு பிடித்துப் போனது. இதனால் மோகன் ராஜா இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்கலாம் என அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயின் வேலாயுதம் படத்தை மோகன் ராஜா தான் இயக்கினார்.
தற்போது சிரஞ்சீவியுடன் ஒரு படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அஜித் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ஹிந்தியில் ஒரு படம் இயக்க ரெடியாக இருப்பதால் மோகன் ராஜா அஜித்தின் 64-வது படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…