Categories: சினிமா

நடிகை ரம்பாவிடம் அத்து மீறினாரா ரஜினி..? விஜய் ரசிகர்களால் வெடித்த பூகம்பம்.. உண்மையில் நடந்தது என்ன..?

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் பல நடிகைகளுடன் காதல் படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா முதல் நயன்தாரா, அனுஷ்கா வரை ஹீரோயின்களாக அவருடன் நடித்திருக்கின்றனர். அவருடன் நடித்த நடிகைகள் யாருமே, அவரை பற்றி எப்போதுமே குறையோ, தவறான புகாரோ சொன்னது இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரம்பா, நான் அருணாசலம் படத்தில் நடித்த போது மதியம் வரை இந்த படப்பிடிப்பிலும், அதற்கு பின், சல்மான்கான் நடித்த பந்தனம் படத்துக்கான படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டேன்.

அருகில் இருந்த ஷெட்டில்தான் அந்த ஷூட்டிங் நடந்தது. அப்போது ரஜினியை பார்க்க வந்த சல்மான்கானை நான் கட்டிப்பிடித்து வரவேற்றேன். அதுதான் பாலிவுட்டில் பழக்கம். அதற்காக கோபப்படுவது போல் அடுத்தநாள் ரஜினி கலாட்டா செய்தார். அப்புறம் ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்ஸ் ஆப் ஆன போது யாரோ என்னை பின்னால் தட்டினார்கள். இருட்டில் தெரியவில்லை. பிறகு பலரிடமும் விசாரித்த போது என்னை பயமுறுத்த, ரஜினிதான் அப்படி தட்டினார் என்று தெரிந்துக்கொண்டேன் என கூறியிருந்தார்.

இதையடுத்து, ரம்பாவிடம் தவறாக நடந்துக்கொண்ட ரஜினி என விஜய் ரசிகர்கள் புயலை கிளப்பிவிட, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறுகையில், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒரு ஜாலியான விஷயமாக தான் அதை ரம்பா நேர்காணலில் சொல்லி இருக்கிறாரே தவிர, புகாராக சொல்லவில்லை. இதை ரஜினி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் இப்படி பிரச்னையை பெரிதுபடுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததில் இருந்து அஜீத்தை விட்டுவிட்டு, இப்போது ரஜினியை விஜய் ரசிகர்கள் பிடித்துக்கொண்டனர் என்று கூறியிருக்கிறார் அந்தணன்.

admin

Recent Posts

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

10 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

18 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

27 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

35 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

55 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

1 மணத்தியாலம் ago