தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினார். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரியலூர் சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் நாகை வந்துள்ளார். பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சற்றுமுன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதில், மீனவ பிரச்சினைகளுக்கு கடிதம் எழுதிவிட்டு கபட நாடகம் போடும் அரசாக திமுக உள்ளது. ஒவ்வொரு முறை வெளிநாட்டு பயணம் முடித்துவிட்டு தாயகம் வரும் முதல்வர் ஸ்டாலின் பலகோடி முதலீடுகளை ஈர்த்த தாக கூறுகின்றார். உண்மையிலேயே மனசு தொட்டு சொல்லுங்க ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் உங்களின் முதலீடா? தமிழ்நாட்டுக்காக முதலீடா அல்லது உங்க குடும்பத்திற்கான முதலீட்டை வெளிநாட்டில் செய்துவிட்டு வரிங்களா. தேர்தலுக்கு முன்னர் இதை செய்வோம் அதை செய்வோம் என சொன்ன திமுகவினர் அதையெல்லாம் செய்தார்களா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…