தமிழகத்தில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகின்றார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார்.
ஒன்றிய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி, ஆனால் நமக்கு இரண்டும் ஒன்றுதான் என விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரச்சாரத்தில் பேசி வரும் அவர், நாம் அனைவரும் சொந்தங்கள் தான். உலகில் எந்த மூலையில் நமது வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான், உறவுகள் தான். தமிழ்நாட்டு மக்களைப் போல் புதுச்சேரி மக்களும் 30 வருடமாக என்னை தாங்கிப் பிடித்து வருகிறார்கள்.
புதுச்சேரி அரசு திமுக அரசு போன்றதல்ல. கட்சி பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசும் முதல்வரும் நடந்து கொள்கிறார்கள். புதுச்சேரியை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் திமுகவை நம்ப வேண்டாம். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்க கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துடன் தொழிற் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் பேசி உள்ளார் என்று விஜய் பேசியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் பரப்புரையில் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் உள்ள போட்டோ பிரேம் பேசு பொருளாகியுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரங்கசாமியுடன் நட்பு பாராட்டி வந்தார். புதுச்சேரியில் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதற்கும் முதல்வர் பெரிதும் உதவியாக இருந்த நிலையில் இந்த போட்டோ மூலம் கூட்டணி உறுதியாகும் என தொண்டர்கள் கேட்டு வருகிறார்கள். இதனால் தமிழக வெற்றி கழகம் – என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…