இந்த நிலமையில கூட Help பண்றீங்க பா.. உங்களுக்கு ரொம்ப நன்றி.. ரசிகருக்கு Call பண்ணி நன்றி தெரிவித்த விஜய்… வைரலாகும் ஆடியோ..

By Begam on மார்கழி 8, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டவர். இதற்காக அவர் தொடங்கியதே விஜய் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

  

   

இந்த இயக்கத்தின் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர்  விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார்.

   

 

நடந்து முடிந்த லியோ சக்ஸஸ் மீட்டிலும் அரசியல் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார். தற்பொழுது சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு உதவ பிரபலங்களும், மீட்பு படையினரும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். தற்பொழுது விஜய் ரசிகர்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

தனது ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதை அறிந்த விஜய்  ‘பெருங்குடி மக்கள் மன்ற’ நிர்வாகிக்கு கால் செய்து அங்கே இருக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களை பத்திரமாக உதவிகள் செய்யுமாறும் கூறினார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)