விஜய் எடுத்த முடிவு… செம டென்ஷனான வி.எஸ்.பாபு….. உடனே ஓடோடி வந்த செங்கோட்டையன்…. தவெக கூடாரத்தில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு….!

Spread the love

தமிழகத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) 19 இடங்களும் ஒதுக்கப்பட்டு அவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாவதை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தவெக தரப்பில் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.

தவெக அமைச்சரவையில் முதல்வர் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன் மற்றும் நெல்லை தொகுதி எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன் ஆகியோருக்கு முக்கிய இடங்கள் கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்று நோக்க வைத்த கொளத்தூர் தொகுதியில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த தவெக எம்எல்ஏ விஎஸ் பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கவனம் ஈர்த்த விஎஸ் பாபுவுக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முடிவு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவையில் சென்னை மாவட்டத்திற்கு ஏற்கனவே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே விஎஸ் பாபு புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இருந்து முதல்வர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ரமணன், ராஜ்மோகன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இதுதவிர, சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் மற்றும் கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மரிய வில்சனும் அமைச்சரவையில் இணைவது உறுதியாகியுள்ளதால், சென்னையில் உள்ள தவெக எம்எல்ஏக்களில் 7 பேருக்கு ஏற்கனவே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாகவே விஎஸ் பாபுவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விஎஸ் பாபு மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியின் இந்த முடிவால் எழுந்துள்ள அதிருப்தியைத் தணிக்கும் பொருட்டு, தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் விஎஸ் பாபுவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தவெக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றாலும், அடுத்த முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது அவர்கள் இணைவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

3 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

3 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

4 மணத்தியாலங்கள் ago