#image_title
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறார். சேவையே கடவுள் என்ற பெயரில் லாரன்ஸ் புதிய அறக்கட்டளையை தொடங்கினார். அதில் மாற்றம் என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவி வருகிறார்.
இந்த அறக்கட்டளையில் எஸ்.ஜே சூர்யா, KPY பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர். முதற்கட்டமாக 10 ஏழை விவசாயிகளுக்கு ராகவா லாரன்ஸ் டிராக்டர்களை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை சேர்ந்த விவசாயிக்கு எஸ்.ஜே சூர்யா தனது சொந்த செலவில் ட்ராக்டர் வாங்கி கொடுத்தார். மாற்றுத்திறனாளி மாணவியின் படிப்புக்கு தேவையான உதவியை ராகவா லாரன்ஸ் செய்தார்.
லாரன்ஸ் உடன் இணைந்து KPY பாலாவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். வயதான தம்பதிகளுக்கு உதவுவது வீடு கட்டி கொடுப்பது என KPY பாலாவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர்கள் மனித தெய்வங்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் அருகே வாலிபர் நின்று கொண்டிருக்கிறார். வீடியோவில் அவர் கூறியதாவது, இவர் பெயர் ஷாம்.
சின்ன வயசுல இருந்து என் தோளில் தூக்கி வளர்த்த குழந்தை. இப்போ வளர்ந்துட்டாரு. இவரு காலேஜ்ல படிச்சிட்டு இருக்காரு. பகுதி நேரமாக வேலையும் பார்த்துட்டு இருக்காரு. இவரோட சொந்த பணத்தில் மாற்றம் சேவையில் இணைந்து ஒரு குழந்தையோட படிப்புக்கு பணம் கட்ட போறாரு. இன்னையிலிருந்து சேவை பண்றதுக்கு வராரு. மாற்றத்தில் சேர்ந்து உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தோடு இந்த சேவை தொடரட்டும் என பேசி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…