#image_title
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்தார். இந்த படம் கண்டிப்பாக விக்ரமுக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தாரித்துள்ளார்.
இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதிமேனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள். எப்போதும் வித்தியாசமான கதையை தேர்வு செய்யும் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த படம் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வை மையமாக வைத்து தான் தங்கலான் படத்தின் கதை உருவாக்க பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்தும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தங்கலான் படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் பணிகள் முடிவடைந்தது. என்னால் முடிந்த உழைப்பை போட்டுள்ளேன். நானும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக trailer வர போகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமையும். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தங்கலான் படம் இருக்கும் என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…